அய்யப்பன் கோவிலில் மகோற்சவம் துவக்கம்!
ADDED :3966 days ago
புதுச்சேரி: அரியாங்குப்பம் அய்யப்ப சுவாமி கோவிலில் மகோற்சவ விழா துவங்கியது. கடலுார் மெயின் ரோடு, அரியாங்குப்பத்தில் அய்யப்ப சுவாமி கோவிலில் 11ம் ஆண்டு மகோற்சவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி, காலை 6.00 மணிக்கு கணபதி ஹோமம், கன்னிமூலகணபதி மஞ்சமாதா, அய்யப்பன் சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. வரும் 6ம் தேதி வரை கன்னிமூலகணபதி, மஞ்சள் மாதா, பெரிய கருப்பண்ணசாமி, சின்ன கருப்பண்ணசாமி, கருப்பாயி அம்மன் சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனை நடக்கிறது. நாளை 5ம் தேதி காலை 9.00 மணிக்கு, அய்யப்ப சுவாமிக்கு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு, யானை வாகனத்தில் வீதியுலா, 7ம் தேதி அய்யப்ப சுவாமிக்கு பால் அபிஷேகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் செய்துள்ளனர்.