உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜீயர் பிரம்மரதத்தில் வீதியுலா!

ஜீயர் பிரம்மரதத்தில் வீதியுலா!

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் கைசீக ஏகாதசியை முன்னிட்டு ஜீயர் பிரம்மரதத்தில் வீதியுலா நடந்தது. திருக் கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் ஜீயர் சீனிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் பிரம்மரதம் ஏறும் வைபவம் நேற்று நடந்தது. அதிகாலை  4.00 மணிக்கு பெருமாள் விஸ்வரூப தரிசனம், 5.00 மணிக்கு கைசீகபுராணம் வாசிக்கப்பட்டது. சுவாமிக்கு 12 முறை துவாதசி ஆராதனை நடந்தது.  காலை 7.00  மணிக்கு ஜீயர் சுவாமிகள் பிரம்மரதத்தில் புறப்பாடாகி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து ஜீயர் மடத்தை அடைந்தார். பாகவத கோஷ்டிகளின் பஜனை பாடல்கள் பாடப்பட்டது. பக்தர்களுக்கு ஜீயர் சுவாமிகள் ஆசீர்வாதம் வழங்கினார். விழா ஏற்பாடுகளை கோவில்  நிர்வாகத்தினர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !