திருப்புவனம் ஐயப்பன் கோயில் கும்பாபிஷேக விழா
ADDED :3966 days ago
திருப்புவனம் : திருப்புவனம் அருகே கீழடியில் ஸ்ரீதர்மசாஸ்தா ஐயப்பன் பக்தசபா சார்பில் அமைக்கப்பட்ட ஐயப்பன் கோயில் கும்பாபிஷேக விழா பிள்ளையார்பட்டி தலைமை அர்சகர் பிச்சை குருக்கள் தலைமையில் நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மூன்று நாட்கள் சிறப்பு யாகம் நடந்தது. கும்பத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை பிச்சை குருக்கள் நடத்தி வைத்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஐயப்பனை தரிசனம் செய்தனர்.அன்னதானம் நடந்தது.ஏற்பாடுகளை தர்சாஸ்தா ஐயப்பன் பக்தசபா நிறுவனர் மச்சக்காளை உள்ளிட்ட பக்தர்கள் செய்திருந்தனர்.