சித்தேரிக்கரையில் அய்யப்ப பூஜை!
ADDED :4165 days ago
விழுப்புரம்; விழுப்புரம் சித்தேரிக்கரை சிவசக்தி மாரியம்மன் கோவிலில் 5ம் ஆண்டு அய்யப்ப பூஜை நடந்தது. விழாவையொட்டி நேற்று முன்தினம் மாலை, சர்வ அலங்காரத்துடன் அய்யப்ப சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தி பாடல்கள் மற்றும் சரண கோஷங்கள் எழுப்பிய பின் பக்தர்கள் வழிபாடு செய்தனர்.