உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோஷ்டியூரில் திருமங்கையாழ்வார் திருநட்சத்திரம்!

திருக்கோஷ்டியூரில் திருமங்கையாழ்வார் திருநட்சத்திரம்!

திருப்புத்தூர்:திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் திருமங்கையாழ்வார் திருநட்சத்திர உற்சவம் நடந்தது.நேற்று 108 வைணவத் திருத்தலங்களுக்கு பாசுரங்கள் பாடியருளியவர் திருமங்கையாழ்வாருக்கு நேற்று திருநட்சத்திர உற்சவம் நடத்தப்பட்டது.

காலையில், மூலவர்,தாயார்,ஆண்டாள் ஆகியோருக்கு அபிஷேகம் நடந்தது.பின்னர் சிறப்பு பூஜைகள் நடந்தன.தொடர்ந்து, திருமங்கையாழ்வார் மூலவர் சன்னதியில் எழுந்தருளினர்.அடுத்து ஆழ்வாருக்கு பல வித திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் திருமங்கையாழ்வார் வேலுடன் " கள்ளர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நாலாயிர திவ்ய பிரபந்தங்கள் வாசிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.தொடர்ந்து தாயார்,ஆண்டாள் சன்னதியில் மரியாதை செலுத்தப்பட்டு, ஆழ்வாருக்கு பாசுரம் பாடப்பட்டது. தொடர்ந்து தீர்த்தம் வழங்கப்பட்டது.பின்னர் அன்னதானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !