10ம் தேதி அய்யப்ப சுவாமிக்கு திருவிளக்கு பூஜை
ADDED :3955 days ago
திருவள்ளூர்: திருவள்ளூர், அய்யப்பா திருப்பணி சேவா சங்கம் சார்பில், தீர்த்தீஸ்வரர் கோவிலில், 44ம் ஆண்டு, திருவிளக்கு பூஜை, அய்யப்பன் சன்னிதியில், வரும் 10ம் தேதி, மாலை 5:00 மணிக்கு நடக்கிறது. அன்று, 18 விளக்கு ஏற்றி வைத்து விசேஷ அலங்காரத்துடன் அன்னாபிஷேகம் நடைபெறும். மறுநாள், 11ம் தேதி, காலை 9:00 மணிக்கு, கணபதி பூஜையும், தொடர்ந்து, அய்யப்ப சுவாமி படம் செட்டித்தெரு காளிகாம்பாள் கோவிலிலிருந்து, பஞ்ச வாத்தியத்துடன் ஊர்வலமாக புறப்படும். மதியம் 12:00 மணிக்கு, உச்சிகால பூஜையும், சமபந்தி போஜனமும் நடைபெறும். அன்று மாலை 6:00 மணிக்கு, வாணவேடிக்கை, பஞ்சவாத்தியம், பஞ்ச பூத வாத்தியத்துடனும் விசேஷ அலங்காரத்துடனும் அய்யப்ப சுவாமி திருவீதி உலா நடைபெறும் இரவு 10:00 மணிக்கு மகா தீபாராதனை நடைபெறும்.