உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செம்மலை மும்மூர்த்தி ஸ்தலத்தில் டிச., 16 சனிப்பெயர்ச்சி கோலாகலம்

செம்மலை மும்மூர்த்தி ஸ்தலத்தில் டிச., 16 சனிப்பெயர்ச்சி கோலாகலம்

மோகனூர்: செம்மலை மும்மூர்த்தி ஸ்தலத்தில், டிசம்பர், 16ம் தேதி, சனிப்பெயர்ச்சி விழா, நடக்கிறது. மோகனூர் அடுத்த, எம்.ராசாம்பாளையம் அறியாத ஊற்று செம்மலையில், மும்மூர்த்தி ஸ்தலம் உள்ளது. இங்கு, ராஜகணபதி, ராஜ ராஜேஸ்வரன், ராஜ ராஜேஸ்வரி, வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர், மகா விஷ்ணு, பிரம்மா, தட்சிணாமூர்த்தி, சனீஸ்வரபகவான், நவக்கிரஹங்கள் ஆகிய ஸ்வாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.இக்கோவில், சனி பகவான் சிறப்பு வழிபாட்டு ஸ்தலமாகவும் திகழ்கிறது. இக்கோவிலில், ஆண்டுதோறும் சனிப்பெயர்ச்சி விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்தாண்டு, டிசம்பர், 16ம் தேதி, சனி பகவான், மதியம், 2.51 மணிக்கு, துலாம் ராசியில் இருந்து, விருச்சிக ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார்.அன்று காலை, 11 மணிக்கு மகா கணபதி பூஜை, கணபதி ஹோமம், சனீஸ்வரர், சகஸ்ரநாமம், காயத்ரி மற்றும் மூல மந்திர ஹோமம் நடக்கிறது. மதியம் 2 மணிக்கு பூர்ணாகுதி, தீபாராதனையும், சனீஸ்வர பகவானுக்கு மகா அபிஷேகமும் நடக்கிறது. மதியம் 2.51 மணிக்கு மகா தீபாராதனை நடக்கிறது.சனிப்பெயர்ச்சியில், மேஷம், சிம்மம், துலாம், விருச்சிகம், தனுசு ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது.ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா ராமசாமி, நிர்வாகிகள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !