உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தியாகராஜ சுவாமிகள் ஆராதனை விழா: ஜனவரி 6ல் துவக்கம்!

தியாகராஜ சுவாமிகள் ஆராதனை விழா: ஜனவரி 6ல் துவக்கம்!

தஞ்சாவூர்: திருவையாறில், சத்குரு தியாகராஜ சுவாமிகள், 168வது ஆராதனை மஹோத்ஸவம், வரும் ஜனவரி, 6ம் தேதி துவங்குகிறது,” என, தியாக பிரம்ம மஹோத்ஸவ சபை தலைவர் ஜி.ஆர்.மூப்பனார் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில், சத்குரு தியாகராஜ சுவாமிகளின், 168வது ஆராதனை மஹோத்ஸவ விழா, ஜனவரி, 6ம் தேதி மாலை, 5:00 மணிக்கு துவங்குகிறது. இரவு, 7:00 மணிக்கு இசை நிகழ்ச்சி நடக்கிறது.ஜனவரி, 7 மற்றும் 8ம் தேதிகளில், காலை, 9:00 மணி முதல், இரவு, 11:00 மணி வரை இசை நிகழ்ச்சிகள் நடக்கும்.ஜனவரி, 9ம் தேதி, காலை, 6:00 மணிக்கு, தியாக பிரம்ம மஹோத்ஸவ சபை சார்பில், சஹஸ்ர நாம அர்ச்சனையும், காலை, 9:00 மணி முதல், இரவு, 11:00 மணி வரை, இசை நிகழ்ச்சிகளும், இரவு, 11:00 மணிக்கு மேல் திவ்யநாமமும் நடத்தப்படுகின்றன.10ம் தேதி காலை, 6:00 மணிக்கு, உஞ்சவிருத்தி பஜனையும், காலை, 8:30 மணிக்கு நாதஸ்வர இசையும், 9:00 மணிக்கு ஆராதனை மற்றும் பஞ்சரத்ன கீர்த்தனைகளுடன் மகாபிஷேகம் ஆகிய நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. காலை, 10:00 மணி முதல், இசை நிகழ்ச்சிகளும், இரவு, 7:30 மணிக்கு மல்லாரியுடன், சத்குரு தியாகராஜர் உருவச்சிலை ஊர்வலம் மற்றும் ஆஞ்சநேய உற்சவ மங்களத்துடன் நிகழ்ச்சி நிறைவடைகிறது. இசை நிகழ்ச்சிகளில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, நூற்றுக்கணக்கான இசைக் கலைஞர்கள் பங்கேற்கின்றனர். இவ்வாறு, அவர் கூறினார். பந்தல் கால் நடவு: திருவையாறு, தியாகராஜ சுவாமிகள் ஆராதனை விழாவுக்காக, நேற்று பந்தல் கால் நடப்பட்டது. விழாவின் போது, இசைக் கலைஞர்கள், பக்தர்கள் மற்றும் பார்வையாளர்கள் அமர வசதியாக, தனித்தனியே மேடை மற்றும் பந்தல் அமைக்கப்பட உள்ளன. பந்தல் அமைப்பதற்கான கால்கோள் விழா, நேற்று நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !