கோதண்ட ராமர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா!
ADDED :3958 days ago
சென்னை: மேற்கு மாம்பலம், கோதண்ட ராமர் கோவிலில், வரும், 21ம் தேதி, அனுமன் ஜெயந்தி விழா நடக்கிறது. மேற்கு மாம்பலம், கே.ஆர்., தெருவில் கோதண்ட ராமர் கோவில் உள்ளது. அங்கு வரும், 21ம் தேதி, அனுமன் ஜெயந்தி விழா நடக்கிறது. அன்று மாலை, 4:00 மணிக்கு அனுமனுக்கு விசேஷ அபிஷேகம் அலங்காரம், நடக்கின்றன. இரவு, 8:00 மணிக்கு உற்சவர் உள்புறப்பாடு, 7:15 மணிக்கு, 1008 வடைமாலை சேவை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.