தாண்டிக்குடி முத்தாலம்மன் கோயில் விழா
ADDED :3958 days ago
தாண்டிக்குடி : தாண்டிக்குடி முத்தாலம்மன், பட்டாளம்மன் கோயில் திருவிழா மூன்று நாட்கள் நடந்தது.பாலாபிஷேகம், சேத்தாண்டி வேடமிட்டு ஊர்வலம் வருதல், ஆபரணப் பெட்டி அழைப்பு, மாவிளக்கு எடுத்தல், அடசல் பானையுடன் சோலைக்கு செல்லுதல், அங்கபிரதட்சணம், அக்னிசட்டி எடுத்தல், பூக்குழி இறங்குதல், முளைப்பாரி எடுத்தல், பொங்கலிடுதல், கிடா பலியிடுடல், மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைந்தது. பழநி எம்.எல்.ஏ., வேணுகோபாலு, பண்ணைக்காடு பேரூராட்சி தலைவர் சண்முகசுந்தரம் கலந்து கொண்டனர். முன்னதாக அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை கிராம பட்டக்காரர் மங்களகாந்தி, கோயில் மேலாளர் இளங்கோவன் செய்திருந்தனர்.