கோரக்கர் சித்தர் பீடத்தில் ஜனன மகா உற்சவம்!
ADDED :3959 days ago
புதுச்சேரி: கோர்க்காடு கிராமத்தில் உள்ள கோரக்கர் சித்தர் பீடத்தில், ஜனன மகா உற்சவ முதலாம் ஆண்டு விழா நேற்று நடந்தது.கோர்க்காடு சித்தர் பல நுாறு ஆண்டுகளுக்கு முன் கோகர்காடு என்னும் கிராமத்தில் குடுவை ஆற்றங்கரையின் தெற்கில் ஆசிரமம் அமைத்து வாழ்ந்து, சித்தி அடைந்ததாக தல வரலாறு கூறுகிறது.இங்கு, கோரக்கர் சித்தர் பீடம் அமைக்கப்பட்டு, கோரக்கர் ஜனன மகா உற்சவ விழா நேற்று நடந்தது.அதையொட்டி, காலை 6.00 மணிக்கு மகா ஹோமம், 10.00 மணிக்கு அர்ச்சனை நடந்தது. மாலை 6.00 மணிக்கு சக்திதாசரின் சொற்பொழிவு நடந்தது.ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.