உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பஞ்சவர்ணேஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை

பஞ்சவர்ணேஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை

திருவள்ளூர்: ஈக்காடு திரிபுரசுந்தரி சமேத பஞ்சவர்ணேஸ்வரர் கோவிலில் இன்று, திருவிளக்கு பூஜையுடன் அய்யப்ப சுவாமி வீதி உலா நடைபெறுகிறது. திருவள்ளூர் அடுத்த, ஈக்காடு கிராமத்தில், திரிபுர சுந்தரி சமேத பஞ்சவர்ணேஸ்வரர் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இக்கோவிலில், அய்யப்ப சுவாமி திருவிளக்கு பூஜை இன்று நடைபெற உள்ளது. இதையொட்டி, நேற்று இரவு 7:00 மணிக்கு அய்யப்ப சுவாமிக்கு, அன்னாபிஷேகம் நடைபெற்றது. இன்று காலை 11:00 மணிக்கு, அய்யப்பனுக்கு நெய் அபிஷேகமும், தொடர்ந்து பகல் 12:00 மணிக்கு சமபந்தி போஜனமும், மாலை 6:00 மணிக்கு விளக்கு பூஜையுடன் அய்யப்ப சுவாமி வீதி உலாவும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை, அய்யப்ப பக்தர்கள், விழா குழுவினர் மற்றும் கிராமவாசிகள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !