பிரம்மரிஷி மலையில் மகா குருபூஜை
ADDED :3958 days ago
பெரம்பலூர : பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் பிரம்மரிஷி மலையடிவாரத்தில் மகா சித்தர்கள் அறக்கட்டளை சார்பில் ஸ்ரீலஸ்ரீ காகபுசுண்டர் சித்தரின் மகா குருபூஜை விழா நடந்தது. 25வது ஆண்டாக நடைபெற்ற விழாவையொட்டி மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம், பேனா, சீருடை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.தொடர்ந்து நேற்று காலை கோ பூஜை, நண்பகல் குருபூஜை விழா 210 சித்தர்கள் யாக பூஜை நடத்தப்பட்டது. பின்னர், சாதுக்களுக்கு வஸ்திர தானம், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, பேனா, அன்னதானம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் திட்டக்குடி ராஜன், சிங்கப்பூர் ரத்தினவேல் உள்பட திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மகா சித்தர்கள் அறக்கட்டளை நிறுவனர் அன்னை சித்தர் எஸ். ராஜ்குமார் சுவாமிகள், இணை நிறுவனர் ரோகிணி, இயக்குநர்கள் சுந்தரமகாலிங்கம், தவசிநாதன் ஆகியோர் செய்தனர்.