சுந்தரேசுவரசுவாமி கோவிலில் கார்த்திகை கடை தீர்த்தவாரி
கும்பகோணம்:இலந்துறை சுந்தரேசுவரசுவாமி கோவிலில் நடைபெற்ற கார்த்திகை கடை செவ்வாய் தீர்த்தவாரியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ஸ்வாமி தரிசனம் மேற்கொண்டனர்.கும்பகோணம் அருகே உள்ள திருநீலக்குடி இலந்துறையில் அபிராமி அம்பாள் உடனாய சுந்தரேசுவரசுவாமி கோவில் உள்ளது. இத்தலத்தில் கார்த்திகை மாதத்தில் வியாசரால் உருவாக்கப்பட்ட வியாசகுளத்தில், செவ்வாய் கிழமை தோறும் மூழ்குவோர் மைந்தனை பெறுதலும், செல்வம், ஞானம், நினைத்ததை அடைதல், இறுதியாக ஐந்தாவது செவ்வாய் கிழமை அன்று, உண்டேல் போக மோட்சங்களும் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும். கார்த்திகை கடைச்செவ்வாய் தீர்த்தவாரி வைபவம் நடைபெற்றது. அபிராமி அம்பாளோடு சுந்தரேச பெருமான், ரிஷப வாகனத்தில், தன்குமாரர்களுடன் வீதியுலா சென்று, வியாசர் குளம் முன் எழுந்தருளினார். பின் தீர்த்தவாரி வைபவம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர், ஸ்வாமிதரிசனம் மேற்கொண்டனர்.விழா ஏற்பாடுகளை ஒப்பிலியப்பன்கோவில் உதவி ஆணையர் மாரியப்பன் மற்றும் ஆலயபணியாளர்கள் செய்திருந்தனர்.