திருநாகேஸ்வரம் தேரோட்டத்துக்கு சாலை சீரமைப்பு
ADDED :4065 days ago
கும்பகோணம்:கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் பேரூராட்சியில், நவக்கிரக தலங்களில் ஒன்றான ராகுதலம் நாகநாதஸ்வாமி கோவில் அமைந்துள்ளது. இன்று கார்த்திகை கடைஞாயிறு தேரோட்டம் நடைபெற உள்ளது.விழாவை முன்னிட்டு, தேரோடும் சாலையை சீரமைத்து தரவேண்டும் என கோரினர். இதையடுத்து பேரூராட்சி நிர்வாக அதிகாரி நந்தகுமார் மேற்பார்வையில் பேரூராட்சி அலுவலர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள், தீவிர பணியில் ஈடுபட்டனர்.தேரோடும் நான்கு முக்கிய வீதிகளிலும் தேங்கியிருந்த மண்முட்டுகளை இயந்திரம் மூலம் சமன் செய்தனர்.