அவிமுக்தேஸ்வரருக்கு முதலாண்டு பூர்த்தி விழா
ADDED :3958 days ago
புதுச்சேரி: புதுச்சேரி அருகே பூத்துறையிலுள்ள அவிமுக்தேஸ்வரர் சிவலிங்கத்திற்கு, முதலாமாண்டு பூர்த்தி விழா இன்று நடக்கிறது.புதுச்சேரி அடுத்த வானுார் தாலுகா, பூத்துறை கணபதி நகர் தியான மையத்தில் உள்ள அவிமுக்தேஸ்வரர் சிவலிங்கத்திற்கு, இன்று (௧௩ம் தேதி) காலை 7.00 மணி முதல் 11.00 மணி வரை, முதலாமாண்டு பூர்த்தி விழா மற்றும் மிருத்தியுஞ்ஜெய ஹோம பூஜை நடக்கிறது.நிகழ்ச்சியில், பெருங்களத்துார் சாரதா சக்தி பீடம், அண்ணாமலையாண்டி சிவயாக சித்தர், முத்தியால்பேட்டை அழுக்கு பைத்திய சுவாமி மடம், ராஜவேலு சுவாமி, காலாப்பட்டு லலிதாஸ்ரமம் ராஜ்குமார், மாநில காங்., பொதுச் செயலாளர் ஆறுமுகம் ஆகியார் கலந்து கொள்கின்றனர்.