உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாரதாம்பாள் கோவிலில் நாளை சிறப்பு பூஜை

சாரதாம்பாள் கோவிலில் நாளை சிறப்பு பூஜை

புதுச்சேரி:எல்லைப்பிள்ளைச்சாவடி சாரதாம்பாள் கோவிலில், நாளை அய்யப்ப சுவாமிக்கு பொது பூஜை நடக்கிறது.இதுகுறித்து ஸ்ரீ சக்தி அய்யப்ப பக்த ஜன சபா தலைவர் வெங்கட்ராமன் வெளியிட்டுள்ள அறிக்கை:ராமகிருஷ்ணா நகர் ஸ்ரீ சக்தி அய்யப்ப பக்த ஜன சபா சார்பில், ஆண்டுதோறும் நடக்கும் பொது சிறப்பு பூஜை, எல்லப்பிள்ளைச்சாவடியில் அமைந்துள்ள ஸ்ரீ சிருங்கேரி சாரதாம்பாள் கோவிலில், நாளை (14ம் தேதி) காலை 9:௦௦ மணி முதல் பகல் 1:௦௦ வரை நடக்கிறது. அதை தொடர்ந்து அன்னதானம் நடக்கிறது. பூஜையில் அனைவரும் பங்கேற்கலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !