திருச்சுழி திருமேனிநாதர் கோயிலில் ருத்திராபிஷேகம்!
ADDED :3957 days ago
அருப்புக்கோட்டை: திருச்சுழி திருமேனிநாதர் சுவாமி கோயிலில், உலக நன்மைக்காகவும், மழை வளம் வேண்டியும் ருத்திராபிஷேகம் நடந்தது. மயிலாடுதுறை சிவபுரம் வேத சிவாகம பாடசாலை நிர்வாகத்தினரும், சென்னை சோழிங்கநல்லூர் பாபாசங்கரும் இணைந்து தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களிலும் ருத்திராபிஷேகம் நடத்தி வருகின்றனர்.
அதன்படி 40 வது திருத்தலமான திருச்சுழி கோயிலில், 121 கலசங்களுடன் , 108 வகையான மூலிகைகளால் அபிஷேகம் செய்யப்பட்டது. 11 சிவாச்சாரியர்கள் ருத்திரமந்திர யாகத்தை நடத்தினர். திருமேனிநாதருக்கு 11 வகையான திரவியங்களால் 121 கலசங்கள் கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது.ஏற்பாடுகளை மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார் தலைமையில் செய்திருந்தனர். இன்று இந்த யாகம் மதுரை செல்லூர் திருவாப்புடையார் கோயிலில் காலை 8 மணிக்கு துவங்குகிறது.