சபரிமலை மண்டல பூஜைக்காக சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு
ADDED :4006 days ago
திண்டுக்கல் :சபரிமலை மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக தென்மாவட்டங்களிலிருந்து சிறப்பு பஸ்களை இயக்க மதுரை மண்டல போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.திண்டுக்கல் மண்டல பொது மேலாளர் மாணிக்கவாசகம் கூறியிருப்பதாவது: "தென்மாவட்டங்களிலிருந்து சபரிமலைக்கு ஏராளமான பக்தர்கள் சென்று வருகின்றனர். குமுளி முதல் சபரிமலை வரை அதிக பஸ்களை கேரள மாநில போக்குவரத்துகழகம் இயக்கி வருகிறது.திண்டுக்கல், பழநி, திருச்சி, மதுரையிலிருந்து சிறப்பு பஸ்களை குமுளிவரை இயக்க முடிவு செய்துள்ளோம். டிச., 27ல் மண்டல பூஜைக்கு 100 பஸ்கள் இயக்கப்படும். ஜன.,14 ல் தேவைக்கேற்ப கூடுதல் பஸ்கள் இயக்கப்படும், என கூறியுள்ளார்.