சபரிமலை அன்னதானத்திற்கு பொருட்கள் வழியனுப்பு விழா
ADDED :4066 days ago
சங்கராபுரம்: சங்கராபுரத்தில் சபரி மலை அன்னதான விழாவிற்கு பொருட்கள் வழியனுப்பு விழா நடந்தது.தர்மசாஸ்தா அன்னதான சேவா சமிதி சார்பில் சபரிமலையில் அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு 25 ஆயிரம்பேருக்கு அன்னதானம் வழங்க பொதுமக்களிடம் பெற்ற 5 டன் உணவு பொருட்கள் லாரி மூலம் சபரிமலைக்கு அனுப்பினர். சங்கராபுரம் காட்டுவனஞ்சூர் ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து அன்னதான பொருட்கள் ஏற்றிச் செல்லும் லாரிக்கு விஷேச பூஜை நடந்தது. அன்னதான சேவா சமிதி பொது செயலாளர் வாசு, மத்திய தலைவர் வேதாந்தம், பொருளாளர் அன்பழகன், மாவட்ட சிறப்பு தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட தலைவர் வைத்தியநாதன், மாவட்டசெயலாளர் சபாநாயகம் உடனிருந்தனர்.