உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநாகேஸ்வரம் நாகநாத ஸ்வாமி கோவிலில் தேரோட்டம்!

திருநாகேஸ்வரம் நாகநாத ஸ்வாமி கோவிலில் தேரோட்டம்!

கும்பகோணம்: கும்பகோணம் அடுத்த திருநாகேஸ்வரம், நாகநாத ஸ்வாமி கோவிலில், கார்த்திகை கடைஞாயிறு விழாவையொட்டி, தேரோட்டம் நடந்தது. கிரிகுஜாம்பிகை, பிறையணி அம்மன் சமேதராக நாகநாத ஸ்வாமி தேரில் எழுந்தருளித்தனார்.

கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் ராகுதோஷ நிவர்த்தி தலமாக கிரிகுஜாம்பிகை உடனாய நாகநாதசுவாமிகோவில் விளங்குகிறது. தேவாரப்பதிகங்களால் பாடல் பெற்றது. சுசீல முனிவரின் குழந்தையை தீண்டியதால் ராகுவிற்கு சாபம் ஏற்பட்டது. தனது சாபத்தை போக்குவதற்காக நாகநாதபெருமானை மாசி மகாசிவராத்திரி நாளில் ராகு வழிபட்டார். ராகுவின் பூஜையை மெச்சிய சிவபெருமான், என்னருள் பெற்ற நீ என்னை வழிபட்டு பின் உன்னை வணங்கும் அடியார்களுக்கு உன்னால் ஏற்படக்கூடிய காலசர்ப்பதோஷம், சர்ப்பதோஷம், களத்திரதோஷம், புத்திரதோஷம், திருமணதோஷம் ஆகியவற்றை நீக்கியருள்வாய் என வரமளித்தார். நாகநாதசுவாமியின் இடப்பாகத்தில் பிறையணியம்மன் சன்னதி உள்ளது. கார்த்திகைத் திங்கள் முழுநிலவு நாளில் இறைவியின் முகத்தில் நிலவொளி படுவது சிறப்பு. சிறப்பு மிக்க இத்தலத்தில் கார்த்திகை கடைஞாயிறு விழாவையொட்டி, தேரோட்டம் நடந்தது. நாகநாத ஸ்வாமி கிரிகுஜாம்பிகை, பிறையணி அம்மன் சமேதராக தேரில் எழுந்தருளித்தனார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !