சனிப்பெயர்ச்சி விழா!
ADDED :3980 days ago
சேலம் : சேலம் மாவட்டம், கெங்கவல்லி தாலுகா, வீரகனூர் தென்கரையில் உள்ள சவுந்தரரேஸ்வரர் கோவிலில், சங்கடங்களை தீர்த்து வைக்கும், சனிபகவானுக்கு, சனிப்பெயர்ச்சி சிறப்பு மஹாயாகம் இன்று மாலை, 2.43 மணிக்கு நடக்கிறது.துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு சனிபகவான் பெயர்ச்சி அடைகிறார். அதையொட்டி மஹாயாகம் நடத்தப்பட உள்ளது. மதியம், 12 மணிக்கு, யாகமும், 12.30 மணிக்கு, சிறப்பு பூஜையும், 1 மணிக்கு, பரிகார மஹாயாகமும், 2 மணிக்கு பூர்ணாஹூதியும் நடக்கிறது. மாலை, 2.43 மணிக்கு, பெயர்ச்சியாவதையொட்டி, சிறப்பு தீபாரதனை நடக்கிறது. பொதுமக்கள், பக்தர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என கோவில் நிர்வாகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.