ஐயப்பன் கோவிலில்108 திருவிளக்கு பூஜை!
ADDED :4321 days ago
விருத்தாசலம் சபரி ஐயப்பன் கோவிலில், சக்தி பூஜையொட்டி திருவிளக்கு பூஜை நடந்தது.
விருத்தாசலம் பாலக்கரை அன்னமய நந்தீஸ்வரர் கோவிலில் உள்ள சபரி ஐயப்பன் சன்னதியில் நான்காம் ஆண்டு சக்தி பூஜை விழா, கடந்த மாதம் 17ம் தேதி துவங்கியது. இதையொட்டி, தினமும் ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, படி பூஜை, ஆன்மிக சொற்பொழிவு நடந்து வருகிறது. 15ம் தேதி காலை, மணிமுக்தாற்றிலிருந்து புனிதநீர் கலசம், பால்குடம், கருப்புசாமி, மஞ்சள் மாதா வேடமணிந்து ஐயப்ப பக்தர்கள் வீதியுலா வரும் நிகழ்ச்சியும், இரவு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சுவாமி வீதியுலாவும் நடந்தது.நேற்று முன்தினம் காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, படி பூஜை, இரவு 7:00 மணிக்கு கோவில் வளாகத்தில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.