ஸ்ரீமுஷ்ணம் சனிப்பெயர்ச்சி விழா!
ADDED :4319 days ago
ஸ்ரீமுஷ்ணம் நித்தீஸ்வரர் சுவாமி கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா நடந்தது.
விழாவையொட்டி கோவில் வளாகத்தில் மகா சனீஸ்வர யாகம் நடந்தது. தொடர்ந்து 16 வகையான கலச அபிஷேகமும், பின்னர் மகா தீபாராதனையும் நடந்தது.
இதில் ஸ்ரீமுஷ்ணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாகத்தினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.