உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மடப்புரம் கோயில் உண்டியல் திறப்பு!

மடப்புரம் கோயில் உண்டியல் திறப்பு!

திருப்புவனம் : திருப்புவனம் மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார் பத்ரகாளியம்மன் கோயில் உண்டியல் பரமக்குடி துணை ஆணையர் ரோசாலின் சமதா முன்னிலையில் திறக்கப்பட்டது. கோயில் செயல் அலுவலர் சுந்தரமூர்த்தி, கோயில் ஊழியர்கள்,பள்ளி மாணவியர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.காணிக்கையாக 7லட்சத்து 90 ஆயிரத்து 546 ரூபாய்,86.500 கிராம் தங்கம்,204 கிராம் வெள்ளி செலுத்தப்பட்டிருந்தது.உண்டியல் எண்ணும் பணி அறங்காவலர் குழு தலைவர் ராஜாங்கம், உறுப்பினர்கள் சுதா,சுரேஷ்,கல்யாணசுந்தரம்,செல்லம் ஆகியோர் மேற்பார்வையில் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !