ஐம்பொன் சிலைகள் நாகையில் கண்டெடுப்பு!
ADDED :5264 days ago
நாகப்பட்டினம்: நாகை அருகே, வீடு கட்ட பள்ளம் தோண்டிய போது பழமையான ஐம்பொன் சிலைகள் கிடைத்தன. நாகை அடுத்த திருக்கண்ணப்புரம், கவரத்தெருவைச் சேர்ந்தவர் ஆதாரமூலிகை, 75.இவர் தமது வீட்டை விரிவுப்படுத்த சாரம் அமைப்பதற்காக வீட்டின் பக்கவாட்டில் பள்ளம் தோண்டியுள்ளார்.சில அடி ஆழத்தில், ஐம்பொன்னாலான, கால் அடி உயரமுள்ள யோகநரசிம்மர், நர்த்தனகிருஷ்ணர், ஆண்டாள், தாயார் ஆகிய சிலைகள் மற்றும் அரை அடி உயரத்தில் குத்துவிளக்கு ஒன்றும் கிடைத்துள்ளது. தகவல் அறிந்த வருவாய்த்துறை அலுவலர்கள், சிலைகளை கைப்பற்றி, நாகை தாசில்தார் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.