பெரியநாயகி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
ADDED :3953 days ago
தியாகதுருகம்: புக்குளம் பெரியநாயகி அம்மன் கோவிலில் அமாவாசை தினத்தை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. தியாகதுருகம் அடுத்த புக்குளம் கிராமத்தில் உள்ள பெரியநாயகி அம்மன் கோவிலில் அமாவாசை தினத்தை முன்னிட்டு மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. கருவறையில் உள்ள புற்றுக்கு மலர் அலங்காரம் செய்து வழிபாடு நடந்தது. இரவு உற்சவர் சிலைக்கு அலங்காரம் செய்து கோவிலை சுற்றி வலம் வந்து வேம்பு மரத்தடியில் உள்ள ஊஞ்சலில் வைத்து மகா தீபாதாதனை நடந்தது. பக்தி பாடல்களை பாடி அம்மனை தாலாட்டி சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டது. சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் இரவு 12 மணிக்கு நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.