உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமபக்த ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா

ராமபக்த ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா

மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் எஸ்.பி.டி.எஸ்., நகர் ராமபக்த ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது. இதையொட்டி கடந்த  12ம் தேதி முதல் தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்து வந்தது. நேற்று முன் தினம் இரவு 7:00 மணிக்கு ஆஞ்சநேயர் சுவாமி ராஜ  அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர். இரவு 9:00 மணிக்கு ராமர் சீதா ஆஞ்சநேயர் சுவாமிகள் சிறப்பு  அலங்காரத்தில், வீதியுலா வந்து அருள்பாலித்தனர். தொடர்ந்து மாணவர்களுக்கு மாறுவேட்ட போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !