உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடலூர் கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா!

கடலூர் கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா!

கடலூர்: கடலூர் நகரில் ஆஞ்சநேயர் கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது. அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு கடலூர் நகரில் உள்ள  ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. அதனையொட்டி கடலூர், செம்மண்டலம் சாந்த ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று காலை  6:30 மணிக்கு பாலாபிஷேகம் மற்றும் திருமஞ்சனத்தைத் தொடர்ந்து மகா தீபாராதனையும், பகல் 1:00 மணிக்கு அலங்கார தரிசனம் நடைபெற்றது.  மாலை 5:00 மணி முதல் முத்தங்கி சேவை தரிசனம் நடைபெற்றது. திருப்பாதிரிப்புலியூர் வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று முன்தினம் காலை  10:00 மணிக்கு சீதா, லட்சுமண, ஆஞ்சநேயர் சமேத கோதண்டராமருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை ஆஞ்சநேயருக்கு 10 ஆயிரத்து 8  வடை மாலை சாற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !