கழிப்பிடமாக மாறும் வரதராஜ பெருமாள் கோவில் நிலம்!
ADDED :3952 days ago
விருகம்பாக்கம்; விருகம்பாக்கம், வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான காலி நிலத்தை பராமரிக்க, சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். விருகம்பாக்கம், வெங்கடேச நகர் பிரதான சாலையில், வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான, 1.08 ஏக்கர் காலி நிலம் உள்ளது. நிலத்தை சுற்றி கோவில் நிர்வாகம், சுற்றுச்சுவர் அமைத்து பராமரிக்கவில்லை. இதனால், மாநகராட்சியினர் குப்பை கொட்டுவதுடன், பகுதிவாசிகள் அந்த இடத்தை திறந்த கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். நிலத்தை சுத்தப்படுத்தி, சுற்றுச்சுவர் அமைத்து பராமரிக்க, கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.