உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதிஜெகந்நாதப்பெருமாள் கோயிலில் பெரியாழ்வார் பாசுரம்!

ஆதிஜெகந்நாதப்பெருமாள் கோயிலில் பெரியாழ்வார் பாசுரம்!

கீழக்கரை: திருப்புல்லாணி ஆதிஜெகந்நாதப்பெருமாள் கோயிலில் அத்யயன உத்ஸவத்தை முன்னிட்டு நேற்று தொடங்கிய பகல் பத்து பூஜையில் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் திருவாபரணங்கள் சாத்தப்பட்டு, பட்டுத்தி, மலர் அலங்காரத்தில் எழுந்தருளினார். முன்னதாக உற்சவ மூர்த்திகள் மற்றும்  நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், ராமானுஜர், மணவாளமாமுனிகள் ஆகியோருக்கு விசேஷ திருமஞ்சன அபிஷேகம் நடந்தது. கோயில் பட்டாச்சாரியார்கள் நாலாயிர திவ்ய பிரபந்தப்பாடல்கள், பெரியாழ்வார் பாசுரம் பாடினர். ஏற்பாடுகளை சமஸ்தான, தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !