பொன்னியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
ADDED :3953 days ago
ஆர்.கே.பேட்டை; திருகாவேரி குளக்கரை பொன்னியம்மன் கோவிலில், ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆர்.கே.பேட்டை அடுத்த, அஸ்வரேவந்தாபுரம் திருகாவேரி குளக்கரையில், பொன்னியம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம், அமாவாசையை ஒட்டி, காலை 10:00 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தன. மாலை 6:00 மணிக்கு, அம்மன் உட்புறப்பாடு நடந்தது. இரவு 8:00 மணிக்கு, ஊஞ்சல் உற்சவம் நடந்தது. கோவில் வளாகத்தில், நள்ளிரவு 12:00 மணி வரை, யாகம் வளர்த்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதே போல் புற்று கோவிலிலும், பெண்கள் சிறப்பு வழிபாடுகள் நடத்தினர். இதில், அஸ்வரேவந்தாபுரம், நாகபூண்டி, ராமாபுரம், ஆர்.கே.பேட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.