உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அனந்தமங்கலத்தில் அனுமன் ஜெயந்தி விழா!

அனந்தமங்கலத்தில் அனுமன் ஜெயந்தி விழா!

மயிலாடுதுறை: நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா அனந்தமங்கலத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ செங்கமலவல்லி தா யார் சமேத ராஜகோபாலா  சுவாமி கோயில் உள்ளது.இங்கு ஸ்ரீ திரிநேத்ர தசபுஜ வீர ஆஜ்சனேயர் தனிசன் னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.  ஆஞ்சனேயர் பிறந்த மார்கழி மாத மூல ந ட்சத்திர மங்கள திருநாளான நேற்று இக் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது. விழாவை  யொட்டி கோயில் மண்டபத்தில் ஸ்ரீ திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சனேயரை எழுந்தருள செய்து சிறப்பு திரு மஞ்சனம் மற்றும் ஆராதனைகள் நடத்தப் பட்டது.அப்போது எட்டு வகையான பொருட்களை கொண்டு சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து முத்து அங்கி அலங்காரத்தில் ஸ்ரீ  ஆஞ்சனேய சுவா மி பக்தர்களுக்கு அருள்பாளித்தார். அபிஷேக,ஆராதனையை மாதவன் பட்டாச்சாரியார் தலைமையிலா னோர் நடத்திவைத்தனர்.  இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடு களை கோயில் செயல் அலுவலர் சிவக்குமார் தலைமையில் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !