திருச்செந்தூரில் வைகாசி விசாகம் கோலாகலம்!
ADDED :5262 days ago
திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று வைகாசி விசாகம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனைமுன்னிட்டு அதிகாலை ஒரு மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. விசாகத்தை முன்னிட்டு அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினர்.