செல்லபிராட்டியில் தில ஹோமம்
ADDED :3947 days ago
செஞ்சி: செஞ்சியை அடுத்த செல்லபிராட்டி லலிதா செல்வாம்பிகை அம்மன் கோவிலில் நேற்று முன் தினம் இரவு அமாவாசையை முன்னிட்டு தில ஹோமம் நடந்தது. காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், சகஸ்ரநாம அர்ச்சனையும் நடந்தது. இரவு 7 மணிக்கு கலச பிரதிஷ்டை செய்து, தில ஹோமம் நடந்தது. இரவு 9 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், கலச நீர் கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், புஷ்பாஞ்சலி, சிறப்பு அர்ச்சனை, தீபாராதனை நடந்தது. அறங்காவலர் கன்னியப்பன், விழா குழுவினர் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜைகளை ஈஸ்வர சிவன் செய்தார்.