உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவநாத பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பு!

தேவநாத பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பு!

கடலூர்: கடலூர், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் பகல் பத்து உற்சவத்தையொட்டி நேற்று தேவநாத சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அரு ள்பாலித்தார். திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் பகல் பத்து உற்சவம் நேற்று முன்தினம் துவங்கியது. இரண்டாம் நாளான நேற்று அதிகாலை  4:00 மணிக்கு சுப்ரபாதம், விஸ்வரூப தரிசனம், கோ பூஜை நடந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜை, திருப்பாவை சாற்றுமுறை நடந்தது. பகல் 12:00  மணிக்கு தேவநாத சுவாமி திருக்கோலத்தில் புறப்பாடும், பாராயணத்தைத் தொடர்ந்து  பகல் பத்து மண்டபத்தில் மண்டகப்படியும் நடந்தது. மாலை 5:00 மணிக்கு சாற்று முறையும், 6:00 மணிக்கு ஆஸ்தான புறப்பாடும் நடந்தது. இன்று வேணுகோபால திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !