உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அய்யப்பன் பூஜா சங்கத்தில் 64வது பூஜா மகோத்ஸவ விழா!

அய்யப்பன் பூஜா சங்கத்தில் 64வது பூஜா மகோத்ஸவ விழா!

கோவை : ராம்நகர் ஸ்ரீ அய்யப்பன் பூஜா சங்கத்தில், 64வது பூஜா மகோத்ஸவ விழா நேற்று துவங்கியது. கோவை ராம்நகர் ஸ்ரீ அய்யப்பன் பூஜாசங்கத்தில், ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில், ’பூஜா மகோத்ஸவ விழா நடக்கிறது. இந்த ஆண்டு, 64வது பூஜா மகோத்ஸவ விழா நேற்று துவங்கியது.முழுவதும் தங்கத்தகடுகள் வேய்ந்தாற்போல் அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில், விநாயகர், சிவன், அய்யப்பன் சுவாமி சிலைகள் எழுந்தருளுவிக்கப் பட்டிருந்தன. சுவாமிகளுக்கு மலர் மாலைகள், திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டிருந்தன. பூஜாசங்க மண்டபத்தில் மூன்று யாககுண்டங்கள் அமைக்கப்பட்டிருந்தன. நேற்று காலை 5.30 மணிக்கு மகாகணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. தர்மசாஸ்தா ஆவாஹனம், சூர்யநமஸ்காரம், அபிஷேகம் செய்யப்பட்டன. வேதவிற்பன்னர்கள், பண்டிதர்கள், வேதபாராயணம் செய்தனர்.

காலை 8.00 மணிக்கு நவக்கிரஹோமம், மகாசுதர்சன ஹோமம், சத்ருசம்ஹார சுப்ரமணிய மாலா மந்த்ர ஹோமம், பகல் 12.00 மணிக்கு உபநிஷத் பாராயணம், பூர்ணாஹுதி, வசோர்த்தாரை நடந்தன. மாலை மேலார்கோடு சகோதரிகள் ரஞ்சனி - மதுவந்தியின் நாமசங்கீர்த்தன இசைநிகழ்ச்சிகள் நடந்தன. இரவு 8.00 மணிக்கு மகாதீபாராதனையோடு முதல் நாள் நிகழ்ச்சிகள் நிறைவடைந்தன.தொடர்ந்து, இன்று காலை வழக்கமான பூஜைகள் நடக்கிறது. காலை 8.30 மணிக்கு மகாருத்ரயக்ஞம் நடக்கிறது. தொடர்ந்து உபநிஷத்பாராயணம், தம்பதிபூஜைகள் நடக்கிறது. மதியம் மகா அன்னதானம் நடக்கிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை அய்யப்பன் பூஜா சங்க நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !