உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தில்லைக்காளியம்மன் உண்டியலில் ரூ.7.56 லட்சம் காணிக்கை வசூல்!

தில்லைக்காளியம்மன் உண்டியலில் ரூ.7.56 லட்சம் காணிக்கை வசூல்!

சிதம்பரம்: தில்லைக் காளியம்மன் கோலில் உண்டியல் காணிக்கையாக  7 லட்சத்து 55 ஆயிரத்து 765 ரூபாய் இருந்தது. பிரசித்தி பெற்ற சிதம்பரம்   தில்லைக் காளியம்மன் கோவிலில்   உள்ள 2 உண்டியல்கள் இந்து அறநிலையத் துறை இணை ஆணையர் ஜோதி முன்னனியில் திறக்கப்பட்டு   காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இப்பணியில் வங்கி ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள் ஈடுபட்டனர்.இந்து அறநிலையத் துறை செயல் அலுவலர்   முருகன், தில்லைக்காளியம்மன் கோவில் மேலாளர் வெங்கடேசன், வாசு உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். ஐந்து  மாதங்களுக்குப் பின் திறக்கப்பட்ட   உண்டியல்களில் பணம், சில்லரைக் காசுகளாக 7 லட்சத்து 55 ஆயிரத்து 765 ரூபாய், 72 கிராம் தங்கம், 160 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாடு   கரன்சிகள் மலேசியா ரிங்கட் 2, அமெரிக்கா டாலர் 1, சவுதி அரபியா ரியால் ஒன்று என காணிக்கை இருந்தது. காணிக்கைகள், சிதம்பரம் நகர   கூட்டுறவு வங்கியில் டிபாசிட் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !