கலச வேள்வி இருமுடி விளக்கு பூஜை
ADDED :3945 days ago
குன்னூர்: குன்னூர் ஆதிபராசக்தி சித்தர் வழிபாட்டு மன்றத்தில், கலச வேள்வி இருமுடி விளக்கு பூஜை நேற்று நடந்தது. குன்னூர் ராஜாஜி நகரில் உள்ள ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தில் நடந்த இந்த சிறப்பு வழிபாடுகள், யாகம், அபிஷேகம், அலங்காரம், மகாதீபாராதனை, பூஜைகள் நடந்தது. குன்னூர் மன்ற தலைவி சாந்தி, பொருளாளர் ராஜகுபேந்தரி, செயலாளர் அனுஷ்யா, மாவட்ட தலைவி இந்திராணி, ரமேஷ், சுந்தர்ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.விழாவில், அ.தி.மு.க.,வினர் பலரும் கலந்து கொண்டு பூஜைகளை நடத்தினர். இலவசமாக ஏழை பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள்,சீருடைகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து அன்னதானம் நடந்தது.