விழுப்புரம் திருமஞ்சன விழா!
ADDED :3935 days ago
விழுப்புரம்: வாணியம்பாளையம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் திருமஞ்சனம் விழா நடந்தது.
வாணியம்பாளையம் லட்சுமி நரசிமம்மர் கோவிலில், தனூர் மாதத்தை முன்னிட்டு திருமஞ்சனம் விழா நடந்தது. காலை 9 மணிக்கு மூலவர் மற்றும் உற்சவர் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை, திருப்பணிக்குழுத் தலைவர் கண்ணன், அறங்காவலர்கள் ராமசாமி, ராமலிங்கம், உபயதாரர் பார்த்தசாரதி செய்திருந்தனர்.