உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவிலை அழித்து குவாரி; சகாயத்திடம் கிராமத்தினர் புகார்!

கோவிலை அழித்து குவாரி; சகாயத்திடம் கிராமத்தினர் புகார்!

மேலூர்: மதுரை மாவட்டம், மேலூர், பெரியசேண்டலை குளத்தில் இருந்த கோவிலை அழித்து, குவாரி நடத்தியதாக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயத்திடம், கிராமத்தினர் புகார் தெரிவித்தனர். மதுரை மாவட்டத்தில், கிரானைட் முறைகேடு குறித்து விசாரித்து வரும் சகாயம், செம்மினிபட்டி ஊராட்சியில், ஒன்பது ஏக்கரில் உள்ள புறாக்கூட்டு மலையை ஆய்வு செய்தார்.அவரிடம் இந்திய கம்யூ., நிர்வாகி மெய்யர், பி.ஆர்.பி., நிறுவனத்தினர், தமிழ்நாடு கனிம நிறுவனம் (டாமின்) பெயரில், 92 அடி உயர மலையை வெட்டி கற்களை கடத்தினர், என்றார்.-புறாக்கூட்டு மலையில், டாமின் குறியீடு மற்றும் எண் கொடுத்து பி.ஆர்.பி., குவாரிக்கு, கற்கள் கொண்டு செல்லப்பட்டதும், பின், காஸ் வெல்டிங் மூலம் குறியீடு அகற்றப்பட்டு வெளிச்சந்தையில் விற்கப்பட்டதும் ஆய்வில் தெரிந்தது.புறாக்கூட்டு மலை மற்றும் அதை ஒட்டிய குளங்களின் எல்லைகளை அவரிடம் காட்ட, வருவாய்த் துறையினர் தடுமாறினர். ஆய்வுக்கு வரும் முன், எல்லைகளை கொடி ஊன்றி வைத்திருக்க வேண்டும், என, சகாயம் தெரிவித்தார்.

கோவில் அழிப்பு: பெரியசேண்டலை குளத்தில் இருந்த முனியாண்டி கோவிலை, பி.ஆர்.பி., நிறுவனத்தினர் அழித்து விட்டனர் என, கிராமத்தினர் புகார் கூறினர். எரிச்சிக்கண்மாயை ஆய்வு செய்த சகாயத்திடம் கிராமத்தினர், விளைநிலங்களில் கிரானைட் கழிவுகளை கொட்டியது குறித்து வி.ஏ.ஓ.,விடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என்றனர். ராஜா என்பவர், எனக்கு கீழே விழுந்து கையில் காயம் ஏற்பட்டது. இப்பகுதியில் உள்ள நாட்டு வைத்தியரிடம் சிகிச்சை பெற்றேன். ஒரு குவாரி நிறுவன தூண்டுதலால், தவறான சிகிச்சை கொடுக்கப்பட்டு கை செயலிழந்தது, என, வேதனை தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !