திருக்கோஷ்டியூரில் ஜன.1ல் பரமபதவாசல் திறப்பு!
ADDED :3929 days ago
திருப்புத்தூர் : திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஜன.,1ல் இரவு 10 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்படுகிறது. இக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, டிச.,21ல் பகல்பத்து உற்சவம் துவங்கியது.அன்று காலை ஆண்டாள் சன்னதியில் பெருமாள் எழுந்தருள, சிறப்பு பூஜை, ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து தினசரி பெருமாள் எழுந்தருளல் நடை பெற்றது. நாளை திருமங்கையாழ்வார் திருவடித் தொழுதல் நடைபெறும். ஜன.,1ல் இரவு 10 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டு, பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் ஏகாதசி மண்டபம் எழுந்தருளி பத்தி உலாத்துதல் நடைபெறும். பின்னர் தாயார் சன்னதி எழுந்தருளி சிறப்பு பூஜை,ஆராதனை நடைபெறும்.தொடர்ந்து ஜன.,2 முதல் இரவு பத்து துவங்கும். தினசரி இரவு 7 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்படும்.