பாலமுருகன் கோவிலில் மண்டலாபிஷேக விழா!
ADDED :3929 days ago
விழுப்புரம்: விழுப்புரம் காலேஜ் நகர் பாலமுருகன் கோவிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா நடந்தது. விழுப்புரம் காலேஜ் நகரில் உள்ள பாலமுருகன் கோவிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா நேற்று காலை 10 மணிக்கு நடந்தது. தொடர்ந்து 108 சங்கபிஷேகம், பகல் 12:00 மணிக்கு மகா அபிஷேகமும் நடந்தது. மாலை 6:00 மணிக்கு ”வாமி சந்தன காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி சண்முகம், அர்ச்சகர் பால”ப்ரமணியன் செய்திருந்தனர்.