உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நல்லாத்தூர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா!

நல்லாத்தூர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா!

புதுச்சேரி: நல்லாத்தூர் வரதராஜப் பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, 1ம் தேதி காலை 5.30மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. ஏம்பலம் அடுத்த நல்லாத்தூர் கிராமத்தில் உள்ள வரதராஜப் பெருமாள் கோவிலில், வரும் 1ம் தேதி, வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, அதிகாலை 4.30மணிக்கு திருப்பாவை சேவை நடக்கிறது. 5.30மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. 6.00மணிக்கு, பக்தர்களுக்கு சந்தன பிரசாதம் வழங்கப்படுகிறது.  தொடர்ந்து, சுவாமி அலங்கார வீதியுலா, 11.00மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அறங்காவல் குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !