உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில் தைலக்காப்பு அலங்காரம்!

சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில் தைலக்காப்பு அலங்காரம்!

குருவித்துறை: குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில் மார்கழி உற்சவத்தில் தைலக்காப்பு அலங்காரத்தில் மூலவர் எழுந்தருளினார். இக்கோயிலில் தினமும் சுவாமிக்கு அபிஷேகம் இங்கு நடப்பதில்லை. மூலவர் சந்தனமரம் வடிவம் என்பதால் ஐப்பசி மாதம் தீபாவளி பண்டிகை, மறுநாள் ஸ்ரீதேவி, பூ தேவியருக்கும்,பெருமாள் சுவாமிக்கும் மூலிகை தைலத்தில் காப்பு உற்சவம் நடந்தது.அன்று முதல் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி வரை தேவியர்கள், சுவாமி தைலக் காப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பர். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நாளை தைலக்காப்பு அலங்காரம் கலைப்பு நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி விஸ்வநாத், ஊழியர்கள் வெங்கடேசன், நாகராஜ் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !