உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னை ராமகிருஷ்ண மடத்தில் கல்பதரு திருநாள்!

சென்னை ராமகிருஷ்ண மடத்தில் கல்பதரு திருநாள்!

சென்னை: எல்லா அறங்களையும் விட்டு, என்னையே சரணடை. நான் உன்னை எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுவித்து மோட்சம் வழங்குகிறேன். பயப்படாதே என்று பகவத் கீதை மூலமாக நமக்கு அபயமளித்தவர் பகவான் ஸ்ரீகிருஷ்ணர். அவ்வாறு பகவான் அருளியது துவாபர யுகத்தில், ஒரு வைகுண்ட ஏகாதசித் திருநாளில். கலியுகத்தில் ஸ்ரீராமகிருஷ்ணராக அவதரித்தபோது அமி கர்மநாசா- என்னைச் சரண் புகுகிறவர்களின் கர்மவினைகளைப் போக்குகிறேன். பயம் வேண்டாம் என்று அதே உத்தரவாதத்தைப் பக்தர்களுக்கு 1886, ஜனவரி 1-ஆம் தேதியன்று வழங்கினார்.

அதிலிருந்து அந்தத் தினம் கல்பதரு தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த இரண்டு விசேஷமான நாட்களும் வரும் 2015, ஜனவரி 1-ஆம் தேதி, வியாழக்கிழமை அன்று ஒன்றாகவே அமைந்துள்ளன. இது ஒரு நல்ல பொருத்தம். அந்த நன்னாளை நாம் பக்தியுடன் அனுஷ்டித்து பகவானின் அருளுடன் புத்தாண்டைத் தொடங்குவோம். என்கிறார் சுவாமி கௌதமானந்தர்.

நிகழ்ச்சி நிரல்: காலை 8.00- சிறப்பு பூஜை, பஜனை
10.00- சொற்பொழிவுகள்: 1. சுவாமி விமூர்த்தானந்தர்
2. ஸ்ரீமத் சுவாமி கௌதமானந்தஜி மகராஜ் (ஆங்கிலம்)
11. 30- சிறப்பு ஆரதி

நண்பகல் 12.00- பிரசாதம்
மாலை 3.00- தியானத்திற்காகக் கோயில் திறப்பு

3.30- வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு பகவத் கீதை பாராயணம்

6.30- ஆரதி
7.00- ஸ்ரீராமநாம சங்கீர்த்தனம்

ஸ்ரீராமகிருஷ்ண மடம், 31, ராமகிருஷ்ண மடம் சாலை, மயிலாப்பூர், சென்னை-4.
போன்: 2462 1110


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !