வீரராகவப் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா!
ADDED :3932 days ago
திருப்பூர் : திருப்பூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு, நாளை அதிகாலை 5:30 மணிக்கு நடைபெற உள்ளது. பக்தர்கள் அதிகளவில் வருவார்கள் என்பதால், விரிவான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம் செய்துள்ளது.சுவாமி தரிசனம் முடிந்து சொர்க்கவாசல் வழியாக வரும் பக்தர்களுக்கு வழங்குவதற்காக, ஸ்ரீவாரி டிரஸ்ட் சார்பில், ஒரு லட்சத்து 8,000 லட்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. காமாட்சியம்மன் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்ற இப்பணியில், 400 பேர் ஈடுபட்டனர்.இதற்காக, 1,500 கிலோ அஸ்கா, 800 கிலோ மாவு, 50 டின் ஆயில்,10 டின் நெய், 50 கிலோ முந்திரி, 25 கிலோ திராட்சை, 10 கிலோ ஏலக்காய், 50 கிலோ லவங்கம் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டன.