உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலையில் வைகுண்ட ஏகாதேசி சிறப்பு தங்க தேரோட்டம்!

திருமலையில் வைகுண்ட ஏகாதேசி சிறப்பு தங்க தேரோட்டம்!

திருமலையில் வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு தங்க ரதத்தில் உற்சவர் மலையப்பசுவாமி தேவியர் சமேததராய் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.கோவிலின் முன் கூடியிருந்த பக்தர்கள் புத்தாண்டு தினத்தன்று தங்கரதத்தில் பெருமாளை தரிசித்து ஆனந்தம் அடைந்தனர்.

திருமலையை பொறுத்தவரை வைகுண்ட ஏகாதேசி மற்றும் துவாதேசி ஆகிய இரு தினங்களுக்கு மட்டும் சொர்க்கவாசல் எனப்படும் வைகுண்டவாசல் கதவு திறக்கப்பட்டு அதன் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

இதன் காரணமாகவும் புத்தாண்டு தினத்தன்று சீனிவாசப்பெருமாளை தரிசனம் செய்யவேண்டியும் ஏாரளமான பக்தர்கள் வருகைதந்தனர்.

வைகுண்ட ஏகாதேசியன்று அனைத்து வகை தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டு சர்வ தரிசனம் எனப்படும் தர்ம தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டார்கள்.பக்தர்கள் தங்குவதற்கு 11 வகை தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டு இருந்தன இரண்டு லட்சத்திற்கும் அதிகமான லட்டுகள் கூடுதலாக ஸ்டாக் வைக்கப்பட்டுள்ளது, நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு காபி,டீ,பால் மற்றும் பொங்கல் போன்ற உணவுகளும் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !