உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைகுண்ட ஏகாதசி விரதம் முடிக்க காய்கறி விற்பனை!

வைகுண்ட ஏகாதசி விரதம் முடிக்க காய்கறி விற்பனை!

திருக்கோவிலூர்: திருக்கோவிலூரில் ஏகாதசி விரதம் இருக்கும் பக்தர்களின் விரதத்தை நிறைவு செய்யும் வகையில் 34 வகை காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டது.

வைகுண்ட ஏகாதசி வைணவர்களுக்கு மிகவும் பிரசித்தி பெற்ற விழாவாக கருதப்படுகிறது. மார்கழி மாத நோன்புடன் ஏகாதசி தினத்தில் கண்விழித்து கடுமையான விரதமிருக்கும் பக்தர்கள் 34 வகையான காய்கனிகளை சமையல் செய்து சுவாமிக்கு படைத்து சாப்பிடுவர். இதற்காக திருக்கோவிலூர் மார்க்கெட்டில் 20 ரூபாய் விலைக்கு, 34 வகையான அனைத்து வகை காய் கறிகளும் விற்றனர். பக்தர்கள் வாங்கிச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !