உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவையில் ஆன்மிக உற்சவம்: தினமலர் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு!

கோவையில் ஆன்மிக உற்சவம்: தினமலர் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு!

கோவை: கோவையில் 01.01.2015 முதல் 11.01.2015 வரை, எப்போ வருவாரோ என்ற தலைப்பில் ஆன்மிக உற்சவ விழா நடக்கிறது. கோவை புரூக் பாண்ட் ரோடு, கிக்கானி மேல்நிலைப்பள்ளியில் உள்ள சரோஜினி நடராஜ் ஆடிட்டோரியத்தில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. தினமும் மாலை 5.45 மணிக்கு அருளிசை நிகழ்ச்சி நடக்கும். தொடர்ந்து, மாலை 6.30 மணிக்கு பல்வேறு அருளாளர்கள் குறித்து அறிஞர்கள் உரையாற்றுகின்றனர். இந்த விழாவை, தினமலர் இணையதளம் இன்று (02.01.2015) முதல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. இந்த நிகழ்ச்சியில் நேற்று வள்ளலார் குறித்து சுகிசிவம் உரையாற்றினார். இன்று (02.01.2015) பட்டினத்தார் குறித்து இரா. செல்வகணபதி உரை நிகழ்த்துகிறார். இந்த நிகழ்ச்சிகளுக்கு கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !